கந்தளாய் பகுதியில் பாழடைந்த காணி ஒன்றில் கைக்குண்டு மீட்பு!
கந்தளாய், 91ஆம் கட்டை பகுதியில் நீண்ட காலமாகப் பாழடைந்திருந்த காணி ஒன்றில், இன்று (28)கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
கந்தளாய் பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அவர்கள் அந்தக் காணியை ஆய்வு செய்தபோது, அங்கு 87-ஜி (87-G) ரக கைக்குண்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
கைக்குண்டு மீட்பு
கடந்த 15 ஆண்டுகளாகப் பாழடைந்து கிடந்த இந்தக் காணியை சுத்தம் செய்துகொண்டிருந்த அயல் வீட்டு பெண் ஒருவர், முதலில் இந்தக் குண்டைக் கண்டுள்ளார்.
உடனடியாக அவர் அருகிலிருந்த ஒருவருக்குத் தகவல் தெரிவிக்க, அதன் பிறகு கந்தளாய் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் , கைக்குண்டை அகற்றப்படும்வரை அப்பகுதிக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளதுடன் கைக்குண்டை மீட்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.





இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri
