அம்பாறையில் வீடொன்றில் இருந்து கைக்குண்டு மீட்பு
அம்பாறை மாவட்டம் - சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடு ஒன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
கட்டட வேலைக்காக கொட்டப்பட்ட மண்ணுக்குள் இருந்து நேற்று(21.10.2024) குறித்த கைகுண்டு மீட்க்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட கைக்குண்டை செயலிழக்கச் செய்ய விசேட அதிரடிபடையினரால் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குண்டை செயலிழக்கும் நடவடிக்கை
குறித்த கட்டட வேலையில் ஈடுபட்டவர்கள் 119 எனும் பொலிஸ் அவசர பிரிவுக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சம்மாந்துறை பொலிஸார் கைக்குண்டை பார்வையிட்டதுடன் குண்டு செயலிழக்கும் விசேட அதிரடி படையினர் மற்றும் குற்றவியல் தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் மீட்கப்பட்ட கைக்குண்டை அவ்விடத்தில் இருந்து அகற்றி செயலிழக்க செய்வதற்காக இன்று சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற கட்டளையை பெற்றதோடு, மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
