கொட்டாஞ்சேனை மாணவியின் மரணம்! சி.ஐ.டியில் முன்னிலையாகியுள்ள சிவானந்த ராஜா
கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சிறுமி தொடர்பான சம்பவம் குறித்து சமூக வளைதளங்களில் வெளியாகும் செய்தி தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு தனியார் கல்வி நிலையத்தின் உரிமையாளரான சிவானந்த ராஜா முறைப்பாடு பதிவு செய்ய குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
தன்னை பற்றியும் தனது அரசியல் மற்றும் தொழில் பற்றியும் போலி செய்திகள் பரப்பப்படுவதாகவும் அது தொடர்பில் முறைபாடு பதிவு செய்ய குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருகைத்தந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், தவறான முடிவெடுத்து உயிரிழந்த விவகாரத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரத்தியேக வகுப்பு ஆசிரியரின் இல்லத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் , மாணவி உயிரிழந்தமை தொடர்பாக சந்தேகத்திற்கிடமான அரசாங்க பாடசாலையின் ஆசிரியர் ஒருவருவரும் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு இன்று (09) மாலை தெரிவித்ததாவது,
இச்சம்பவம் தொடர்பான பொலிஸ் 'பி' அறிக்கை தமது அமைச்சிற்கு கிடைத்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியரை, நிறுவன விதிக்கோவையின் பகுதி II, அத்தியாயம் XLVIII இன் பிரிவு 27:9 இன் படி கட்டாய விடுமுறையில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு, இச்சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதன் அறிக்கை கிடைத்தவுடன் முறையான ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இந்த சம்பவம் தொடர்பில் சில தரப்பினர் தமது பணி பொறுப்புகளை புறக்கணித்திருக்கின்றனரா என்பதை ஆராய்வதற்காக அமைச்சினால் உள்ளக விசாரணை ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விடயம் தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் வாதப்பிரதிவாதம் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
