இரண்டு பேருந்துகள் மோதி கோர விபத்து - 25 பேர் வைத்தியசாலையில் அனுமதி
ஹம்பாந்தோட்டை - மாத்தறை பிரதான வீதியில் பல்லேமல பகுதியில் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானதில் 25 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று பிற்பகல் 1 மணியளவில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும், தனியார் பயணிகள் பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்திற்கான காரணம்
பேருந்து கடைச்சுவரின் ஒரு பகுதியை உடைத்துக்கொண்டு சென்றதில் சுமார் 25 பேர் காயமடைந்து ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்து இடம்பெற்ற போது காலி மற்றும் தெஹியத்தக்கண்டிய இடையே பயணித்த பேருந்தில் சுமார் 57 பயணிகள் இருந்ததாக ஹம்பாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

பேருந்தில் இருந்தவர்களில் சுமார் 20 பேர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் வெளிநாட்டினர் சிலரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் இருவர் பெண் சுற்றுலாப் பயணிகள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
திஸ்ஸமஹாராம மற்றும் மாத்தறை இடையே பயணித்த பேருந்தில் இருந்த எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
தெஹியத்தகண்டிய டிப்போவைச் சேர்ந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து, தெஹியத்தகண்டியவிலிருந்து காலி நோக்கிச் சென்ற தனியார் பயணிகள் பேருந்தை முன்னால் முந்திச்செல்ல முயன்ற போது விபத்திற்குள்ளாகியுள்ளது.
தனியார் பயணிகள் பேருந்தின் பின்புறத்தில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து மோதியதில், இலங்கை போக்குவரத்து சபை பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடதுபுறத்தில் உள்ள கடையின் சுவரில் மோதி நின்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பில் ஐவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு! பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை
நிலா-சோழனுக்கு கிடைத்த உயில், ஆனால் அதில் இருந்தது என்ன தெரியுமா?... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
கெத்தாக வீட்டிற்குள் வந்த ஜனனி, குணசேகரன் சொன்ன விஷயம்... எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
18 ஆண்டுகள் கழித்து ராகு-சூரிய சேர்க்கை: அடுத்த ஒரு மாதத்ததுக்கு இந்த 4 ராசிகளுக்கு பணமழை தான்! Manithan