புதிய தலைமையுடன் போரை தொடங்கவுள்ள ஹமாஸ்!
ஹமாஸ் அமைப்பின் தலைவர் மரணித்திருந்தாலும், அவர்களது இலக்கானது ஈரானின் ஆதரவுடனும், புதிய தலைமையுடனும் பல மடங்காக தொடரும் என அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஹமாஸ் அமைப்பின் தலைவர் யஹ்யா சின்வார் கொல்லப்பட்டதற்கு அலி கமேனி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள இரங்கல் பதிவில் இதனை வலியுறுத்தியுள்ளார்.
குறித்த இரங்கல் பதிவில் அவர் தெரிவிக்கையில்,
The loss of Yahya #alSinwar is painful for the Resistance Front. But this front didn’t halt its progress in wake of the martyrdoms of eminent figures like Sheikh Ahmed Yassin, Fathi Shaqaqi, Rantisi, & Ismail Haniyeh. Similarly, it won’t falter with Sinwar’s martyrdom either.
— Khamenei.ir (@khamenei_ir) October 19, 2024
சின்வாரின் மரணம்
“சின்வாரின் மரணம் இஸ்ரேலின் எதிர்ப்பு குழுக்களுக்கும், ஹமாஸ் உட்பட ஈரான் ஆதரவு பிராந்திய பிரதிநிதிகளின் வலையமைப்புக்கும் பாரிய இழப்பாகும்.
இழப்பு மிகப்பெரியது என்றாலும் எமது நடவடிக்கைகள் தொடரும்.
பல ஆண்டுகளாக முந்தைய ஹமாஸ் தலைவர்களை இஸ்ரேல் பலிவாங்கியிருந்தாலும், தமது முன்னேற்றத்தை அந்த அமைப்பு ஒருபோதும் நிறுத்தவில்லை.
இஸ்ரேலிய அதிகாரிகள்
அதேபோல், தற்போதைய சின்வாரின் மரணம் தியாகமே தவிர, ஹமாஸிற்கான பின்னடைவல்ல.
மேலும், இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் தனது வாழ்க்கையை அர்ப்பணித்ததற்காக சின்வாரைப் பாராட்டுகின்றேன்” என தெரிவித்துள்ளார்.
காசாவில் போரை ஆரம்பித்து வைத்த ஒக்டோபர் 7 தாக்குதலின் தலைமை கலைஞர் என்று இஸ்ரேலால் நம்பப்படும் சின்வார்.
புதன்கிழமை ரஃபாவில் வழக்கமான தரை வழி கண்காணிப்பு பணியின் போது இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர். அவரது மரணத்தை ஹமாஸ் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |