எகிப்து வழங்கிய போர்நிறுத்த செயற்றிட்டம்! ஹமாஸ் வழங்கிய பதில்
எகிப்து நாட்டின் ஆலோசனைக்கமைய ஐந்து இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிக்கும் புதிய திட்டத்திற்கு ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளது.
ஒரு ஆண்டுக்கும் மேலாக காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 50,000இற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து, அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர், போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்தன.
மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்
எகிப்து நாடும் போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்கு ஆதரவளிக்க, பணயக்கைதிகளை பரஸ்பரம் விடுவிப்பதாக கூறி போர்நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.
எவ்வாறாயினும், மார்ச் 1ஆம் திகதியுடன் முதற்கட்ட போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் முடிவடைய, இரண்டாம் கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்படாமல் இருந்தது.
இந்நிலையில், காசா மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இந்தநிலையில், எகிப்து, பணய கைதி விடுவிப்பு மற்றும் போர்நிறுத்த ஒப்பந்தம் ஆகியவற்றுக்கான செயல்திட்டம் ஒன்றை வழங்க, ஹமாஸ் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
