ஈரான் ஜனாதிபதி மறைவுக்கு ஹமாஸ் இரங்கல்
உலங்கு வானூர்தி விபத்தில் சிக்கி உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின்(Ebrahim Raisi) மறைவுக்கு ஹமாஸ் அமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் உடனான போரில் தங்களுக்கு ஆதரவு வழங்கியதாகவும் அவர் குறித்த நினைவுகளை ஹமாஸ் பகிர்ந்துள்ளது.
மேலும், பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை தடுக்க அரசியல் ரீதியாக தங்களுக்கு ஆதரவு வழங்கியதாக காசாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஹமாஸ் கூறியுள்ளது.
ஏவுகணை தாக்குதல்
இப்ராஹிம் ரைசி உடன் விபத்தில் உயிரிழந்த ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹுசைனின் ஆதரவும் தங்களுக்கு இருந்ததாகவும் அறிவித்துள்ளது.
இந்நிலையில், கடந்த மாதம் ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை கொண்டு இஸ்ரேல் நாட்டை ஈரான் நேரடியாக தாக்கி இருந்தது. தங்கள் மீது இஸ்ரேல் தரப்பில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதலை ஈரான் மேற்கொண்டது. இஸ்ரேலின் வடக்கு எல்லையோர பகுதியில் இயங்கி வரும் ஹிஸ்புல்லாவுக்கும் ஈரான் ஆதரவு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |