மதுபான விற்பனை நிலையங்களில் பாதிக்கும் மேற்பட்டவை அரசியல்வாதிகளுக்கு சொந்தமானவை!
குடும்பத்தை மையமாக கொண்ட தேர்தல் முறைமையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை பயன்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
2000க்கும் மேற்பட்ட மதுபான நிலையங்கள் அரசியல்வாதிகளுக்கு சொந்தமானவை
நாடுழு முழுவதிலும் இருக்கும் மதுபான விற்பனை நிலையங்களில் பெரும்பாலானவை அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு சொந்தமானது என்பதாலேயே மதுபான அச்சுறுத்தலில் இருந்து நாட்டை மீட்பது கஷ்டமான காரியமாக மாறியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் சட்ட ரீதியாக அனுமதிப் பெற்ற 4 ஆயித்து 910 மதுபான விற்பனை நிலையங்கள் இருக்கின்றன.
அவற்றில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுபான விற்பனை நிலையங்களின் உரிமை தற்போது அரசியலில் ஈடுபட்டு அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்ளுக்குரியது.
தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு 128 மதுபான விற்பனை நிலையங்கள் இருப்பதாகவும் டலஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்துள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 16 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

உக்ரைனில் கால் பதிக்கும் ஐரோப்பிய நாடுகளின் படைகள்! ரஷ்யா தொடர்பில் டிரம்ப் வழங்கிய உறுதி News Lankasri
