மூன்று மாதங்களில் 18 மரணங்கள்: ஆபத்தாகும் கொழும்பு..!
நாட்டில் இந்த ஆண்டில் மாத்திரம், 19 துப்பாக்கிச்சூடுகள் பதிவாகியுள்ளதுடன் அவற்றில் 18 நபர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது உண்மையில், நாட்டு மக்களுக்கு பெரும் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்கட்சி தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இருப்பினும், இச்சம்பவங்கள் அனைத்தும் பாதாள உலக கும்பலை சேர்ந்தவர்கள் மத்தியிலேயே இடம்பெறுவதாகவும் இதன் காரணமாக தேசிய பாதுகாப்புக்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, தொடர்ந்து, கொழும்பிலேயே அதிக துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. அவை குறித்து இருப்பினும் அரசாங்கம் இத்தகைய அசமந்த போக்கினை காட்டுவதை எந்த கோணத்தில் பார்ப்பது என்று விசனங்களும் எழுந்த வண்ணம் உள்ளன.
நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இவ்வாறான சம்பவங்களை பாா்த்தும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லையா என்ற கேள்வியும் பல்வேறு தரப்புகளில் முன்வைக்கப்படுகின்றது.
இந்நிலையில், அரசாங்கமும் இது தொடர்பில் பெரிதாக எவ்வித தகவல்களையும் வெளிப்படுத்தவில்லை. எனவே, இவ்விடயம் குறித்து விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |