தென்னிலங்கையில் பெண்களுக்கு அச்சுறுத்தலாக மாறிய இருவர்
ஹொரண பகுதியில் திருடப்பட்ட முச்சக்கர வண்டிகளில் பயணித்து, பெண்களின் தங்க நகைகள் மற்றும் கைப்பைகளை கொள்ளையடிக்கும் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் கொள்ளைச் சம்பவங்களுக்கு பயன்படுத்திய இரண்டு முச்சக்கர வண்டிகள், திருடப்பட்ட தங்க நகை, கையடக்கத் தொலைபேசி மற்றும் 4800 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
மொரகஹஹேன - கும்புகா பகுதியில் உள்ள ஜெயா மாவத்தை அருகே இரண்டு சந்தேகத்திற்கிடமான நபர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கொள்ளைச் சம்பவங்கள்
கைது செய்யப்பட்ட பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில், கடந்த மாதம் 8 மற்றும் 12ஆம் திகதிகளில் ஹொரணை பகுதியில் இருந்து இரண்டு முச்சக்கர வண்டிகள் திருடப்பட்டு, இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் நடந்திருப்பது தெரியவந்தது.
திருடப்பட்ட தங்க நகைகள் ஹொரணையில் உள்ள ஒரு தனியார் அடகுக் கடையில் அடகு வைக்கப்பட்டுள்ளதை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இரண்டு சந்தேக நபர்களும் ஏற்கனவே கொள்ளை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை பெற்றமை தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதா பொலிஸார் தெரிவித்தனர்.