பாதாள உலக கும்பலின் அடாவடிகள்: அநுர என்ன செய்ய போகிறார்!
புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு தாக்குதலிற்கு பின்னர், நாட்டில் பெரும் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து நாட்டில், தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இது மக்களுக்கு பெரும் அச்சத்ததை ஏற்படுத்தியுள்ளதாகவும் பல்வேறு தரப்புகளிலில் இருந்து விமர்சனங்கள் எழுந்தன.
அத்துடன், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எதிர்கட்சி தரப்பினர் உட்பட அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், இன்று புதுக்கடை நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் மித்தெனிய துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் விளக்கமளித்திருந்தார்.
அந்தவகையில், அநுர அரசாங்கம் நாட்டில் தொடர்ந்து, நடைபெற்று வரும் பாதாள உலக கும்பலின் செயற்பாடுகள் குறித்து எவ்வாறான நடவடிக்கைனளை முன்னெடுக்க போகின்றது என்பது உற்று நோக்கப்பட வேண்டிய விடயம்.
இது தொடர்பில் பல்வேறு விடயங்களுடன் வருகின்றது, தேசிய மக்கள் சக்தி கட்சியின் தமிழ் மொழி ஊடக இணைப்பாளர் தா.க. ஐன்ஸ்டீன் உடனான நேர்காணல் நிழ்ச்சி..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |