மன்னார் துப்பாக்கிச்சூடு : பலியானவர்கள் தொடர்பில் வெளியான தகவல்
புதிய இணைப்பு
மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சவேரியன் அருள் (வயது 61) மற்றும் செல்வக்குமார் யூட் (வயது 42) என தெரியவந்துள்ளது.
படுகாயம் அடைந்த ஆணொருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற இரட்டை படுகொலையை தொடர்ந்து நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று வந்த நிலையில் இவர்கள் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
வழக்கொன்றுக்காக நீதிமன்றத்திற்கு வருகை தந்தவர்களை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது, மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்தநிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் படுகாயமடைந்த இரு ஆண்கள் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல்கள் - ஆஷிக்
இரண்டாம் இணைப்பு
மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக சற்று முன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதி
இதன் போது வழக்கு அலுவல் ஒன்றுக்காக நீதிமன்றத்துக்கு வருகை தந்த மூவர் துப்பாக்கிச் சூடுபட்டு படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்த மூவர் ஆபத்தான நிலையில் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் குறித்து மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |