கொழும்பை அண்மித்த பகுதியில் துப்பாக்கிச் சூடு
கொழும்பை அண்மித்த மீகொடை பிரதேசத்தில் நேற்றிரவு பத்து மணியளவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
மீகொட, முதுஹேனவத்த, நந்துன் உயன பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் முன்பாக ஆகாயத்தை நோக்கி குறித்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
அச்சுறுத்தும் நடவடிக்கை
முகம் மறையும் வகையில் ஹெல்மட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் கைத்துப்பாக்கி ஒன்றினால் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிசார் துப்பாக்கித் தோட்டாவின் வெற்று உறையை கண்டெடுத்துள்ளனர்.
குறித்த வீட்டில் வசிக்கும் பெண் துபாயில் கார்கோ பொதி அனுப்பல் சேவையொன்றை நடத்தி வருவதாகவும் அவரைப் பயமுறுத்தும் வகையில் குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 12 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் திரும்ப பெறப்படும் 72,000 கார்கள்: எந்தெந்த கார் மாடல்கள் இடம்பெறுகிறது தெரியுமா? News Lankasri

அமைதிப் பேச்சுவார்த்தையை முடக்கினால்... கடுமையான விளைவுகள்: எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் News Lankasri
