அதிகாலையில் நடந்த துப்பாக்கிச் சூடு: தனிப்பட்ட தகராறால் ஏற்பட்ட விபரீதம்
அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவின் கொக்கல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்தவர் மீது இன்று (31) அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது, தாக்கப்பட்டவர் படுகாயமடைந்துள்ளதுடன் தாக்குதல் நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதி
காயமடைந்தவர் அம்பலாந்தோட்டை, கொக்கல பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில், காயமடைந்த நபருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் சிறிது காலமாக இருந்த தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்ய அம்பலாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
