பிரித்தானியா செல்லும் ஐரோப்பியர்களுக்கு வெளியாகியுள்ள முக்கிய தகவல்
இன்று முதல், (ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி முதல்) பிரித்தானியா செல்லும் ஐரோப்பிய பயணிகள், மின்னணு பயண அனுமதி ஒன்றை வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, பிரித்தானியாவுக்கு செல்லும் ஐரோப்பிய பயணிகள் அனைவரும், The Electronic Travel Authorisation (ETA) என்னும் மின்னணு பயண அங்கீகாரத்தை பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ETA அனுமதி
சுமார் இரண்டு ஆண்டுகள் செல்லுபடியாகும் என கூறப்படுகின்ற இந்த மின்னணு பயண அங்கீகாரத்துக்கான கட்டணம் 10 பவுண்டுகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஏப்ரல் 9ஆம் திகதி முதல், இந்தக் கட்டணத்தை 16 பவுண்டுகளாக உயர்த்த பிரித்தானிய உள்துறை அலுவலகம் முடிவு செய்துள்ளது.
மேலும், சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கும் இந்த அனுமதி பெறுவது கட்டாயம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
