ட்ரம்பின் புதிய வரி கொள்கை! பொருளாதார சிக்கலை எதிர்கொள்ளவுள்ள பல நாடுகள்
அமெரிக்காவின் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை இலக்கு வைத்து அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னெடுக்கும் திட்டங்கள் சர்வதேசத்தின் கவனத்தை பெற்றுள்ளது.
இதனடிப்படையில் நடைமுறைக்கு வரவுள்ள அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு திட்டம் தொடர்பில் உலக நாடுகள் பெரும் பொருளாதார தாக்கத்தை எதிர்கொள்ளும் என கூறப்படுகிறது.
அமெரிக்காவை பொறுத்தவரை மொத்தம் 21 நாடுகளை நியாயமற்ற முறையில் வர்த்தக நடைமுறையை பின்பற்றுவதாக பட்டியலிட்டுள்ளது.
முதல் 15 நாடுகள்
அதில் ஆர்ஜென்டினா, அவுஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், தென் கொரியா, மலேசியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, சுவிட்சர்லாந்து, தாய்வான், தாய்லாந்து, துருக்கி, பிரித்தானியா மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் அடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் முதல் 15 நாடுகளை குறிவைத்து தான் வரி விதிக்கப்படுவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்து இருந்தார்.
அதனடிப்படையில் டொனால்ட் ட;ரம்ப்பின் இந்த கூடுதல் வரி விதிப்பில் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியல் வெளியாகி உள்ளது.
இந்த பட்டியலில் முதலிடத்தில் சீனா உள்ளது. ட்ரம்ப் வரி விதிப்பில் சீனா அதிகம் பார்க்கப்படும் என கூறப்படுகிறது.
இதற்கு அடுத்ததாக 2ஆவது இடத்தில் ஐரோப்பிய நாடுகள் உள்ளன.
3வது இடத்தில் மெக்சிகோ, 4வது இடத்தில் வியட்நாம், 5வது இடத்தில் அயர்லாந்து, 6வது இடத்தில் ஜெர்மனி, 7வது இடத்தில் தைவான், 8வது இடத்தில் ஜப்பான், 9வது இடத்தில் தென்கொரியா, 10வது இடத்தில் கனடா ஆகியவை உள்ளன.
இந்த பட்டியலில் 11வது இடத்தில் இந்தியா இடம்பெறுகிறது. 12வது இடத்தில் தாய்லாந்து, 13வது இடத்தில் இத்தாலி, 14வது இடத்தில் ஸ்விட்சர்லாந்து, 15வது இடத்தில் மலேசியா, 16வது இடத்தில் இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகள் இடம் பெற உள்ளன.
ட்ரம்ப் குற்றச்சாட்டு
இந்த 16 நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தகம் மிக சிறந்த முறையில் காணப்படுகிறது.
ஆனால் பொருள் ஏற்றுமதி, குறைந்த வரி விதிப்பு உள்ளிட்டவற்றால் இந்த நாடுகள் அமெரிக்காவை வைத்து இலாபம் தேடுவதாக ட்ரம்பின் குற்றச்சாட்டு எழுந்திருந்தது.
இதனடிப்படையில் இன்று இந்தியா உள்பட பல நாடுகளுக்கு ட்ரம்ப் கூடுதல் வரிகளை விதிக்க உள்ளார்.
இதுபற்றி அறிவிப்பு வெளியான பிறகு எந்தெந்த நாடுகளுக்கு அதிக வரிகளை ட்ரம்ப் விதித்துள்ளார் என்பது பற்றி முழுமையான தகவல் வெளியாகும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
மேலும் இலங்கைக்கும் அதிகபடியான வரி விதிப்பு கொள்கை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
