கருணா உள்ளிட்டோர் மீதான தடை! அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம்
ஜெனரல் சவேந்திர சில்வா உட்பட 4 இலங்கையர்கள் மீது சமீபத்தில் தடைகளை விதிக்க பிரித்தானியா எடுத்த முடிவுகள் தொடர்பான பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கையை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க, ஒரு அமைச்சர் குழுவை நியமிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
பிரித்தானிய அரசாங்கம் எடுத்த முடிவுகள் குறித்து அமைச்சரவையின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா விதித்துள்ள தடைகளின் தாக்கங்களை மதிப்பிடுவதற்கும், மேலும் நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பதற்கும் அரசாங்கம், ஒரு சிறப்புக் குழுவை அமைத்துள்ளது.

இதற்காக, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து முழுமையான ஆய்வு நடத்தவும், தொடர்புடைய துறைகளில் நிபுணர்களை அணுகவும் அமைச்சரவை, இந்த குழுவுக்கு அதிகாரம் அளித்துள்ளது.
மேலதிக தகவல் - இந்திரஜித்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam