கொழும்பில் உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞன் தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல்
கொழும்பு கோட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டலின் 31வது மாடியில் உள்ள அறையில் இருந்து விழுந்து உயிரிழந்த இளைஞன் குறித்து தற்போது பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த இளைஞன் மன விரக்தியால் உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கண்டி, குண்டசாலை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் மீட்பு
உயிரிழந்த இளைஞனின் பணப்பையில், “மன்னிக்கவும், அம்மா, நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன், நான் எப்போதும் அதைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக்கிறேன்” என எழுதப்பட்ட ஒரு குறிப்பையும் பொலிஸார் கண்டுபிடித்தனர்.
இந்த இளைஞன் நேற்று முன்தினம் இரவு ஹோட்டலுக்கு வந்து 31வது மாடியில் ஒரு அறையை முன்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் அங்கு பணியாற்றும் ஊழியர் ஒருவர் தோட்டப் பகுதிக்கு அருகில் அடையாளம் தெரியாத ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக செய்த முறைப்பாட்டை தொடர்ந்து, பொலிஸாரினால் மீட்கப்பட்டது.
உயிரிழந்த இளைஞனின் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வந்ததாகவும் அதில் சப்ஸ்க்ரைபரஸ் ஒரு லட்சத்தை தாண்டியுள்ளமையும் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
