தொடருந்தில் அவுஸ்திரேலிய பெண்ணின் மரணத்திற்கு காரணமான விபரீத செயல்
கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கிச் செல்லும் ஒடிசி தொடருந்தில் பயணித்த அவுஸ்திரேலிய பெண் ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்றதால் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றையதினம் (31.03.2025) நானுஓயா மற்றும் அம்பேவெல தொடருந்து நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் நடந்துள்ளது.
தொடருந்தின் மிதி பலகையில் நின்றவாறு செல்ஃபி எடுக்க முயன்ற போது அவரது தலை இரும்புக் கம்பம் ஒன்றில் மோதியதுடன் அவர் நிலைதடுமாறி தொடருந்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதி
இதனையடுத்து, அவர் ஆபத்தான நிலையில், நுவரெலியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
27 வயதுடைய குறித்த சுற்றுலாப் பயணி, எல்ல பிரதேசத்திற்கு செல்வதற்காக ஒடிசி தொடருந்தில் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

மில்லில் வேலை பார்த்த தமிழ்நாட்டுக்காரர் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது ஐஏஎஸ் அதிகாரி News Lankasri

பாகிஸ்தானை குறிப்பதால் 'மைசூர் பாக்' பெயர் மாற்றம்: இனி இப்படித்தான் அழைக்க வேண்டுமாம் News Lankasri
