தென்னிலங்கையில் அதிகாலையில் பரபரப்பு - நுழைந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு
கொழும்பின் புறநகர் பகுதியான இரத்மலானை ரயில்வே கட்டடத்திற்கு நுழைந்தவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை கட்டடத்தினுள் பொருட்களை திருடுவதற்காக பிரவேசித்த ஐவர், அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.
இதன்போது, சந்தேக நபர்களை, ரயில் பாதுகாப்பு உத்தியோகத்தர் துப்பாக்கியால் சுட்டதாக தெரியவந்துள்ளது.
துப்பாக்கி சூடு
துப்பாக்கி சூட்டில் சந்தேக நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மற்ற சந்தேக நபர்கள் தப்பி ஓடியுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த பாதுகாப்பு உத்தியோகத்தரும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சந்தேக நபரும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதிய கார் வாங்கியுள்ள அய்யனார் துணை சீரியல் நடிகர் பாண்டியன்... மனைவியுடன் வெளியிட்ட வீடியோ இதோ Cineulagam
இலங்கை பாடகர் சபேசனுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத விஷயத்தை செய்த எஸ்.பி.சரண்... எமோஷ்னலான மேடை Cineulagam