காலியில் பாடசாலை ஒன்றுக்கு முன்னால் துப்பாக்கிச் சூடு
காலி- அஹுங்கல்லவில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு முன்னால் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
லக்ஷான் மதுஷங்க என்ற 28 வயதான இளைஞர் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன் அவரின் இடுப்புப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு காயம் ஏற்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு
அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு, முச்சக்கர வண்டியில் தப்பிச் சென்றதாகத் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு பிஸ்டல் ரக துப்பாக்கியால் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam
