நானாட்டான் சுற்றுவட்டத்துக்கு அருகாமையில் தீ பரவல்
முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானாட்டான் சுற்றுவட்டத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள வாகனங்களுக்கான வயரிங் பழுது பார்க்கும் கடை ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
இன்று வியாழக்கிழமை (17) மாலை ஏற்பட்ட அந்த தீ பரவல் காரணமாக அந்த கடை முற்றாக எரிந்து சேதமாகியுள்ளது.
வழிபாடு
அந்த கடைக்கு உள்ளே நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் வண்டிகளும் முற்றாக எரிந்துள்ளதாக தெரிய வருகிறது.
அருகில் உள்ள ஆலயத்தில் பெரிய வியாழன் வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்தமையால் அங்கிருந்த இளைஞர்கள் ஓடி வந்து குறித்த தீப்பரவலை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போதிலும் கடை முற்றாக எரிந்து அதற்குள் உள்ள இயந்திர பொருட்களும் எரிந்து சாம்பலாகி உள்ளன.
குறித்த கடையில் ஏற்பட்ட திடீர் மின் ஒழுக்கு காரணமாகவே தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.