அம்பலாங்கொடை பகுதியில் துப்பாக்கிச்சூடு : இருவர் உயிரிழப்பு
அம்பலாங்கொடை - உரவத்த பிரதேசத்தில் உந்துருளியில் பயணித்த இருவர் இன்று (10) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளனர்.
மற்றொரு உந்துருளியில் வந்த இருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஆணும், பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், அவர்கள் இருவரும் அம்பலாங்கொடை - குளிகொட பிரதேசத்தைச் சேர்ந்த கணவன் மனைவி என தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் வர்த்தகம்
சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய விசாரணையின்படி T 56 ரக துப்பாக்கியால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
