ஈஸ்டர் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் தேவாலயம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டால் பரபரப்பு
பெரிய வெள்ளி தினமான நேற்றிரவு கண்டி, மன்னம்பிட்டி கிறிஸ்த தேவாலயம் ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட பின்னர் தப்பிச் சென்ற சந்தேக நபர், துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டார்.
மன்னம்பிட்டி பிரதான வீதியில் வசிக்கும் 38 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கி சூடு
குறித்த தேவாலயத்தின் ஆயர் உடனான தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எனினும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் காரணமாக எந்தவொருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. அந்த சமயத்தில் அங்கு யாரும் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஆனாலும் தேவாலயத்தின் மீது சன்னங்கள் பட்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஈஸ்டர் பண்டிகை
துப்பாக்கிச் சூடு நடத்ததுவதற்கு முன்னர் அங்கு கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாளையதினம் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடவுள்ள நிலையில், இந்தத் தாக்குதல் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
