காலி கோட்டை உணவக மோதல்: உணவகத்தின் 11 ஊழியர்களுக்கு விளக்கமறியல்
காலி கோட்டையில் அமைந்துள்ள உணவகத்தின் மேலாளர் உட்பட 11 ஊழியர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வாடிக்கையாளர்கள் குழுவைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிலேயே அவர்கள், 2025 ஏப்ரல் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2025 ஏப்ரல் 16ஆம் திகதி இரவு, உணவு தொடர்பான பிரச்சினை காரணமாக, உணவக ஊழியர்களுக்கும் உணவருந்திய குழுவினருக்கும் இடையே முறுகல், உடல் ரீதியான மோதலாக மாறியது.
பலர் காயம்
இதன்போது, கொழும்பைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரும், 17 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுவர்களும் உட்பட ஆறு பேர் காயமடைந்து காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விசாரணைகளைத் தொடர்ந்து, தாக்குதலில் தொடர்புடைய 11 பேரையும், பொலிஸார் அடையாளம் கண்டு கைது செய்து, அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |