புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் வீட்டில் போதைப்பொருளும் துப்பாக்கியும் மீட்பு!
களுத்துறை மாவட்டத்தின் மத்துகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யட்டதொலவத்த பிரதேசத்தில், புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றிலிருந்து போதைப்பொருட்கள், துப்பாக்கி என்பவை கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் இன்று விடுத்துள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தலைமையகத்துக்குக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக மத்துகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யட்டதுலவத்த பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
குறித்த வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோகிராம் 55 கிராம் ஹெரோய்ன், 50 கிராம் ஐஸ் போதைப் பொருள், வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்படும் துப்பாக்கி, போதைப்பொருட்களை அளவீடும் செய்யும் இலத்திரனியல் தராசு என்பவற்றை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள், துப்பாக்கி மற்றும் இலத்திரனியல் தராசு என்பவை பொலிஸ் போதைப்பொருள் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸ் போதைப்பொருள் பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam