மத்திய கிழக்கில் உக்கிரமடையும் போர்! ஈரானின் ஏவுகணைகளை இடைமறித்த வளைகுடா நாடுகள்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்ற நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.
லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) இரவோடு இரவாகப் புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
இதனையடுத்து இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இருப்பினும், அச்சுறுத்தல் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், இதுவரை உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றும் இஸ்ரேலிய அவசரச் சேவைகள் தெரிவித்துள்ளன.
மீட்கும் பணிகள்
ஈரானின் ஏவுகணைகளை சவுதி அரேபியா, கத்தார் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் இடைமறித்து அழித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆயிரக்கணக்கான மக்கள் அப்பகுதியில் சிக்கியுள்ள நிலையில், அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

ஓமானிலிருந்து பிரித்தானிய அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட முதல் சிறப்பு விமானம் லண்டன் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தை வந்தடைந்தது.
இது குறித்து பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி கூறுகையில்: "அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புத் தாக்குதல்களில் (Offensive action) பங்குபெற எங்களுக்கு விருப்பமில்லை.
இலங்கை கடற்பரப்பில் வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்
தற்காப்பு நடவடிக்கை
ஆனால், தற்காப்பு நடவடிக்கைகளுக்கு (Defensive action) நாங்கள் நிச்சயமாக ஆதரவளிப்போம்.ஓமானிலிருந்து மேலும் பல சிறப்பு விமானங்கள் இயக்கப்படும்," என்றார்.

பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர் கெமி பேடெனோக் அரசின் மெத்தனப் போக்கைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
"சைப்ரஸில் (Cyprus) உள்ள நமது தளங்கள் தாக்கப்படுகின்றன, ஆனால் பிரதமர் வாக்குறுதி அளித்த 'HMS Dragon' போர்க்கப்பல் இன்னும் போர்ட்ஸ்மவுத் துறைமுகத்திலேயே நிற்கிறது. இந்நேரம் அது அங்கே சென்றிருக்க வேண்டும்," என்று அவர் சாடியுள்ளார்.
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri