மும்பை - வான்கடே மைதானத்தில் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் சாதனை
இந்தியா (India) மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வான்கடே மைதானம் அமைந்துள்ளது.
இந்த மைதானத்தில் கடந்த 1975, ஜனவரி 23ஆம் திகதி முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகின்றது.
குறித்த மைதானத்தின் 50வது ஆண்டு விழாவை மும்பை கிரிக்கெட் சங்கம் கொண்டாடி வருகிறது.
கிரிக்கெட் ஆர்வலர்கள்
இந்தநிலையில், 50வது ஆண்டு விழாவை முன்னிட்டு வான்கடே மைதானத்தில் கின்னஸ் சாதனை ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது.
The Mumbai Cricket Association (MCA) on Thursday achieved the Guinness World Record for the largest cricket ball sentence using 14,505 red and white varieties of the ball at the Wankhede Stadium. pic.twitter.com/nL3i8OVGHY
— Devendra Pandey 🦋 (@pdevendra) January 23, 2025
அதில், வான்கடே மைதானத்தில் மொத்தம் 14,505 சிவப்பு, வெள்ளை நிற கிரிக்கெட் பந்துகளைப் பயன்படுத்தி 'FIFTY YEARS OF WANKHEDE STADIUM' என்ற ஆங்கில வாக்கியம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், கிரிக்கெட் பந்துகளைப் பயன்படுத்தி பெரிய ஆங்கில வாக்கியம் அமைக்கப்பட்டமை கின்னஸ் சாதனையாக பதியப்பட்டுள்ளது.
இதில் குறிப்பாக கின்னஸ் சாதனைக்கு பயன்படுத்தப்பட்ட பந்துகள் கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு வழங்கப்படவுள்ளன.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |