இரண்டாவது 20க்கு20 போட்டியிலும் இந்தியா வெற்றி
சுற்றுலா இங்கிலாந்து (England) அணிக்கும் இந்திய (India) அணிக்கும் இடையிலான இரண்டாவது 20க்கு20 கிரிக்கட் போட்டியில் இந்திய அணி, 2 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
சென்னை சிதம்பரம் மைதானத்தில் இடம்பெற்ற இந்தப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி தமக்கான 20 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றது.
மூன்றாவது 20க்கு20 போட்டி
இதில், ஜோ பட்லர் 45 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இந்திய அணியின் பந்துவீச்சில் அக்சர் பட்டேல் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுக்களை கைப்பற்றினர்.
இதனையடுத்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 19.2 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 166 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றியீட்டியது.
இதில், திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 72 ஓட்டங்களை பெற்றார். ஏற்கனவே இரண்டு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்தநிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது 20க்கு20 போட்டி, நாளை மறுநாள் ராஜ்கொட்டில் நடைபெறவுள்ளது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |