கின்னஸ் சாதனை படைத்த நாய்!
போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்த போபி என்ற நாய் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
இந்த நாய் 30 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
உலகின் மிகப் பழமையான நாய்
எனவே அந்த நாய்க்குட்டிக்கு உலகின் மிகப் பழமையான நாய் என்று பெயரிடப்பட்டுள்ளது.
கின்னஸ் உலக சாதனைகளின்படி, இந்த இனத்தைச் சேர்ந்த நாய்கள் வழக்கமாக 12 முதல் 14 வயது வரை மட்டுமே வாழ்பவை.
ஆனால் இதே இனத்தைச் சேர்ந்த இந்த போபி நாய், பெப்ரவரி 2 ஆம் திகதி 30 ஆண்டுகள் மற்றும் 267 நாட்கள் வாழ்ந்து புதிய சாதனை படைத்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் ஒரு நாய்...!
இதற்கு முன்பு கடந்த 1939 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் ஒரு நாய் 29 வயது வரை வாழ்ந்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது போபி அந்த நாயின் சாதனையை முறியடித்துள்ளது.
30 வயதான போபி, 23 வயதான சிஹுவாஹுவா என்ற ஸ்பைக்கிடம் இருந்து, உலகிலேயே மிகவும் அதிக நாட்கள் வாழும் நாய்க்கான உலக சாதனைப் படைத்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
உலகின் மிக வயதான நாய் ஸ்பைக் சிஹுவாஹுவா என்று கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த சில நாட்களுக்குப் பிறகு குறித்த நாய் புதிய சாதனை படைத்துள்ளது.