அரச வைத்தியசாலைகளில் ஒக்சிஜன் பயன்பாட்டிற்கான முதலாவது தேசிய வழிகாட்டி வெளியீடு
சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில், இலங்கையின் அரச வைத்தியசாலைகளில் ஒக்சிஜனைப் பயன்படுத்துவது தொடர்பான முதலாவது தேசிய வழிகாட்டித் தொடர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
யுனிசெப் (UNICEF) நிறுவனத்தின் ஆதரவுடன் சுகாதார அமைச்சினால் தயாரிக்கப்பட்ட இந்த முன்முயற்சியானது, நோயாளி பராமரிப்பில் ஒக்சிஜன் பயன்பாட்டை தரப்படுத்துவதையும், மருத்துவ நிர்வாகிகள், விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களுக்கிடையிலான தொழில்நுட்ப அறிவை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
100 சுகாதார நிபுணர்களுக்கு முதற்கட்ட பயிற்சி
சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் குமார விக்கிரமசிங்க தலைமையில் இந்த வழிகாட்டிகள் தொகுக்கப்பட்டு, அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

இந்த அறிமுகத்துடன் இணைந்து, விசேட வைத்திய நிபுணர்கள் உட்பட 100 சுகாதார நிபுணர்களுக்கு முதற்கட்டமாக பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
பயிற்சி பெற்ற இந்த நிபுணர்கள், மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் உள்ள ஏனைய ஊழியர்களுக்குப் பயிற்சிகளை வழங்குவார்கள்.
நாடு முழுவதும் சீரான நடைமுறைகள்
இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் சீரான நடைமுறைகள் உறுதி செய்யப்படும். கொழும்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டதாவது:
"அரசு வைத்தியசாலைகளின் ஒக்சிஜன் தேவைக்காக அரசாங்கம் ஆண்டுதோறும் கணிசமான தொகையை செலவிடுகிறது. இந்த புதிய வழிகாட்டிகள் மற்றும் பயிற்சித் திட்டங்கள் மூலம், நோயாளர் பராமரிப்பின் தரம் மற்றும் ஒழுங்கமைப்பை மேம்படுத்த முடியும்."
உலக சந்தையில் அதிரடியாக உயர்ந்த எண்ணெய் விலை! இலங்கையின் பெட்ரோல் மற்றும் டீசல் தயாரிப்புகளில் சிக்கல்