முல்லைத்தீவில் கிராம சேவையாளர் கைது
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பணி இடைநிறுத்தப்பட்ட கிராம சேவையாளர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(28) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிராம சேவையாளர் கைது
புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் கொண்டு சென்றபோது குறித்த சந்தேகநபரை புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு முன்பாக கைது செய்துள்ளனர் .

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விசாரணைகளினை தொடர்ந்து வைத்திய பரிசோதனையின் பின்னர் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியை சேர்ந்த 38 வயதுடைய பணி இடைநிறுத்தப்பட்ட கிராம சேவையாளர் ஆவார்.

இவர் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கிராம சேவையாளராக இருந்த போது ஐஸ் போதைப்பொருள் பாவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டதனை தொடர்ந்து புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலையான பின்னர் கிராம சேவையாளர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
பீகார் சென்ற அய்யனார் துணை குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த சந்தா அப்பா... புதிய பரபரப்பான புரொமோ Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam