தென்னாப்பிரிக்காவில் தீவிரமடையும் இனவெறி அச்சுறுத்தல்
தென்னாப்பிரிக்காவின் துறைமுக நகரான டர்பனில் வசித்து வந்த மலாவி நாட்டைச் சேர்ந்த 3,000க்கும் மேற்பட்ட மக்கள், தங்களுக்கு எதிராக அதிகரித்து வரும் இனவெறி அச்சுறுத்தல்கள் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறி வெட்டவெளியில் தஞ்சமடைந்துள்ளனர்.
முறையான ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டினர் அனைவரும் வரும் ஜூன் 30ஆம் திகதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தி, கம்பு மற்றும் சாட்டைகளுடன் ஆயுதமேந்திய கும்பல் ஒன்று தென்னாப்பிரிக்கா முழுவதும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.
இதன் காரணமாக, மலாவி மக்கள் தங்கள் குழந்தைகளுடன் டர்பன் நகரில் உள்ள ஒரு பூங்காவை தற்காலிகத் தங்குமிடமாக மாற்றி, கடும் குளிரிலும் போதிய வசதிகள் இன்றியும் தவித்து வருகின்றனர்.
இனவெறி அச்சுறுத்தல்
பலர் தங்களை சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்புவதே தற்போதைய சூழலில் பாதுகாப்பானது என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா தலைமையிலான எம்கே கட்சி, ஆவணங்களற்ற வெளிநாட்டினருக்கு எதிராகப் பேரணி நடத்தத் தங்களது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து இந்த வன்முறை தீவிரமடைந்துள்ளது.

வெளிநாட்டினர் தங்களது வேலைவாய்ப்புகளையும் பொருளாதார ஆதாரங்களையும் பறித்துக் கொள்வதாகத் தென்னாப்பிரிக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எதிர்வரும் நவம்பர் மாதம் அங்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் ஆதாயங்களுக்காக இந்த இனவெறித் தாக்குதல்கள் தூண்டப்படுவதாகப் மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 15 மணி நேரம் முன்
பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி Manithan