ஹெலிகொப்டர் விபத்து! - குரூப் கேப்டன் வருண் சிங்கும் உயிரிழப்பு
அண்மையில் தமிழகத்தில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த விமானப்படை குரூப் கேப்டன் வருண் சிங், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த தகவலை இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தின் குன்னூர் அருகே கடந்த கடந்த 8ம் திகதி இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா மற்றும் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.
ஹெலிகாப்டரில் இருந்த குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் 80 சதவீத தீக்காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டார். அவர் பெங்களூருவில் உள்ள விமானப்படை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனையடுத்து ஹெலிகொப்டரில் பயணித்த 14 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, குரூப் கேப்டன் வருண் சிங் உயிரிழந்தமைக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“வருண் சிங் நாட்டிற்கு பெருமையுடனும், வீரத்துடனும் சேவை ஆற்றியுள்ளார் என புகழாரம் செய்துள்ளார். குரூப் கேப்டன் வருண் சிங்கை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழந்த இரங்கல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்....
தமிழகத்தில் இந்திய முப்படை தளபதி பயணித்த ஹெலிகொப்டர் விபத்து! - 10 பேர் பலி (VIDEO)
குன்னூர் ஹெலிகொப்டர் விபத்து: படுகாயங்களுடன் மீட்கப்பட்ட விமானப்படை கேப்டன் குறித்து வெளியான விபரம்
வீட்டு வாசலில் விழுந்த 2 உடல்கள்.. பதறி போன காட்டேரி மக்கள்.. என்ன நடந்தது குன்னூரில்?

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam
