குன்னூர் ஹெலிகொப்டர் விபத்து: படுகாயங்களுடன் மீட்கப்பட்ட விமானப்படை கேப்டன் குறித்து வெளியான விபரம்
இந்திய முப்படைகளின் தளபதி பயணித்த ஹெலிகொப்டர் தமிழகத்தில் இன்றைய தினம் விபத்துக்குள்ளாகியிருந்தது.
இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஹெலிகொப்டரை இயக்கியவர்களில் விமானப்படை கேப்டன் ஒருவர் மட்டுமே படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். அவருக்கு வெலிங்டனில் உள்ள இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
கேப்டன் வருண் சிங் இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் சௌர்யா சக்கரம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர். 2020 ஆம் ஆண்டு வானில் அவசர சூழலில் தன்னுடைய தேஜஸ் போர் விமானத்தை காப்பாற்றியதற்காக இவருக்கு விருது வழங்கப்பட்டது’ என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்....
முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் மறைவு!வைகோ இரங்கல்
தமிழகத்தில் இந்திய முப்படை தளபதி பயணித்த ஹெலிகொப்டர் விபத்து! - 10 பேர் பலி
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam