கிரீன்லாந்து பாதுகாப்பு ஒப்பந்தம் : ஆர்க்டிக் பிராந்திய பாதுகாப்பை நேட்டோ பொறுப்பேற்கும்
கிரீன்லாந்தின் பாதுகாப்புத் தொடர்பில் டென்மார்க், கிரீன்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையில் நாளை(22.09.2026) புதிய ஒப்பந்தமொன்று கையெழுத்தாகவுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆர்க்டிக் பிராந்தியத்தின் பாதுகாப்புப் பொறுப்புகள் அமெரிக்கா மற்றும் டென்மார்க்கிற்கு மட்டும் உரியதாக இராது, வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பான நேட்டோவிடம் (NATO) கையளிக்கப்படும் என டென்மார்க் அறிவித்துள்ளது.
நேட்டோவிடம் கையளிக்கப்படும்
நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தின் போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.

இந்த ஒப்பந்தம் தனக்கு கிரீன்லாந்தின் பாதுகாப்பு மற்றும் தேவைகளில் "நிரந்தரக் கட்டுப்பாட்டை" வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து தரப்புகள் இது குறித்து கருத்துத் தெரிவிக்காத போதிலும், ஒப்பந்தம் கிரீன்லாந்தின் இறையாண்மையைப் பாதுகாக்கும் என்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் நியாயமான பாதுகாப்பு நலன்களைக் கருத்திற் கொண்டு இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக டென்மார்க் வெளியுறவு அமைச்சர் லார்ஸ் லோக்க ரஸ்மியூசன் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் மூலம் ஆர்க்டிக் பிராந்தியத்தில் அமைதியும் பாதுகாப்பும் மேலும் வலுப்படும் என நேட்டோ அமைப்பும் வரவேற்புத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கனடாவில் விமானப் பயிற்சியில் ஈடுபட்ட இரு மாணவர்களுக்கு நேர்ந்த சோகம் - அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு