செங்கடலில் இலக்குவைக்கப்பட்ட கிரேக்க எரிபொருள் கப்பல்: ஹவுதி வெளியிட்ட காணொளி
செங்கடலில் பயணம் செய்த கிரேக்க எரிபொருள் நிரப்பு கப்பலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தாக்குதலில் ஒரு மில்லியன் லீற்றருக்கும் அதிகமான பீப்பாய் எரிபொருளைக் கொண்டு சென்ற கப்பலே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான காணொளியை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
BREAKING: Yemen's #Houthi rebels release shocking video of attack on #Greek tanker Sounion!
— GlobeUpdate (@Globupdate) August 30, 2024
Footage shows fighters storming ship as fires rage, after initial gunfire from 2 small boats on Aug 23
150,000 tonnes of crude oil on board #Yemen #TankerAttack https://t.co/fBCVJXu4Ja pic.twitter.com/kPHT5pJNYF
வெளியேற கால அவகாசம்
கிளர்ச்சியாளர்கள், முதலில் கப்பலை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
தொடர்ந்து பணியாளர்களுக்கு வெளியேற கால அவகாசம் அளித்ததன் பின்னர், கப்பலை வெடிமருந்துகளால் வெடிக்கச் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இஸ்ரேலுக்கு எதிராக விரைவில் ஆயுதம் ஏந்திய நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்றும் கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எரிபொருள் விலை
ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இந்த தாக்குதலால் உலகில் எரிபொருள் விலையில் நிச்சயமற்ற நிலை உருவாகும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
செங்கடல் ஊடாக எரிபொருள் போக்குவரத்து சில காரணங்களால் ஸ்தம்பிதமடைந்தால், உலகில் எரிபொருள் விலை அதிகரிப்பதுடன் பொருட்களின் விலையும் பாரியளவில் அதிகரிப்பதற்கு அது முக்கிய காரணியாக அமையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |