வலுக்கும் எகிப்து எல்லை பிரச்சினை: கட்டாருக்கு பயணமான மொசாட் புலனாய்வு அமைப்பு
காஸாவின் பதற்றத்தை குறைக்கும் நோக்கோடு போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் உள்ள மத்தியஸ்தர்கள் புதிய திட்டத்தை வரும் நாட்களில் முன்வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எகிப்துடனான காசாவின் எல்லையில் உள்ள பிலடெல்பி நடைபாதை மற்றும் நெட்ஸாரிம் பிரதேசங்கள் தொடர்பில் சர்வதேசத்தின் பார்வை திரும்பியுள்ள நிலையில் இந்த திட்டம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிலடெல்பி நடைபாதை மற்றும் நெட்ஸாரிம் ஆகிய பிரதேசங்கள் இஸ்ரேலிய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என பெஞ்சமின் நெதன்யாகு கூறிய நிலையிலேயே குறித்த பேச்சுவார்த்தை இடம்பெறும் என கூறப்படுகிறது.
இஸ்ரேல் தாழ்வாரங்கள்
காசாவில் இருந்து இஸ்ரேலியப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்று ஹமாஸ் கோருகிறது.

அதே நேரத்தில் நெதன்யாகு இஸ்ரேல் தாழ்வாரங்களின் கட்டுப்பாட்டை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்த விடயம் மத்தியஸ்தர்களுக்கு பெரும் சிக்கலை தோற்றுவித்துள்ளது. எவ்வாறாயினும், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் பெரும் இடைவெளிகள் இருப்பதால், போர் நிறுத்த ஒப்பந்தத்தை நோக்கிய குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இது அர்த்தப்படுத்துமா என்பது தெளிவாகத் தெரியவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இஸ்ரேல் இராணுவம்
இதன்படி இஸ்ரேல்இராணுவம், மொசாட் புலனாய்வு அமைப்பு மற்றும் ஷின் பெட் பாதுகாப்பு சேவையின் அதிகாரிகளை நேற்று கட்டாருக்கு போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்கு அனுப்பியுள்ளது.

காஸாவின் பிலடெல்பி மற்றும் நெட்ஸாரிம் தாழ்வாரங்களின் நிலை குறித்து சமீபத்தில் பேச்சுவார்த்தைகள் வலுப்பெற்றுள்ள நிலையில், இஸ்ரேலின் அரசாங்கம் தொடர்ச்சியான பாதுகாப்புக் கட்டுப்பாட்டிற்கு அழுத்தம் கொடுக்கிறது என குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான நீதி.. இன்று வரை கேள்விக்குறியே! 1 மணி நேரம் முன்
CM ஆன விஜய், அதற்கு எதற்கு அது வேண்டும்... மூன்று முடிச்சு சீரியல் நடிகர் நியாஸ் ஓபன் டாக் Cineulagam
சனி ஜெயந்தியில் உருவாகிய புதாதித்ய ராஜயோகம் ... இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண்: நீதி கிடைக்காமல் தவிக்கும் குடும்பத்தினர் News Lankasri
செம மாஸ் வரவேற்பு பெற்றுள்ள கருப்பு திரைப்படம்... சந்தோஷத்தில் சூர்யா வெளியிட்ட செம வீடியோ Cineulagam