திடீரென வெடித்து சிதறிய கண்ணாடி!புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதி கோரவிபத்து
கிரேக்கத்தின் வட பகுதியில் இரண்டு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் இதுவரை 36 பேர் பலியாகி உள்ளதுடன் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்திற்கான காரணம்
கிரேக்க நாட்டு நேரப்படி நேற்றிரவு லரிசா என்ற நகரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்துக்கொண்டிருந்த பயணிகள் புகையிரதம் மீது, எதிர் திசையில் வந்துக்கொண்டிருந்த சரக்கு புகையிரதம் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி உள்ளது.
Hospital officials say at least 60 people are injured after a passenger train collided with an oncoming freight train in northern Greece. https://t.co/Lcf9kvjmJR pic.twitter.com/i3FvRIYu1J
— ABC News (@ABC) March 1, 2023
விபத்தினால் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் சுமார் 150 தீயணைப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
பாதிக்கப்பட்டவரின் கருத்து
இந்த கோர விபத்தில் புகையிரத பெட்டிகள் துண்டாக உடைந்து விழுந்து நொறுங்கி கிடக்கின்றன. புகையிரத பெட்டிகளின் இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கி இருந்துள்ளதுடன் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
விபத்து நடந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாதவர்கள் விபத்து குறித்து கூறும்போது, "விபத்து நடந்தபோது புகையிரத பெட்டிகளின் கண்ணாடிகள் திடீரென வெடித்து சிதறியது, அதன்பிறகு இடிபாடுகளில் சிக்கிக்கொண்டோம்" என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

திருப்பி அடிக்கும் இந்தியா., பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் News Lankasri
