கைதிகளை பார்வையிட காத்திருப்போருக்கு சிறந்த சந்தர்ப்பம்
76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கைதிகளுக்கு திறந்த வெளியில் பார்வையாளர்களை காண்பிக்கும் திட்டம் எதிர்வரும் 4 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அன்றைய தினம் சிறைச்சாலை விதிமுறைகள் மற்றும் சுகாதார பாதுகாப்பு முறைகளை பின்பற்றி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது ஒரு கைதியை மூவர் பார்வையிடும் சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கைதிகளின் உறவினர்கள் தடை செய்யப்பட்ட பொருட்களை சிறைச்சாலை வளாகத்திற்குள் கொண்டு வருவது தடை செய்யப்பட்டுள்ளதாகவும் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 4 மணி நேரம் முன்

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
