மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையின் போது பெரும் சலசலப்பு
தலவாக்கலை பகுதிகளிலுள்ள 16-18 வயது பிரிவு மாணவர்களுக்கு இன்று தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையின் போது பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அரசியல் தலையீட்டுக்கும் அது வழிவகுத்தது. இறுதியில் ஒரு மணிநேர ஸ்தம்பிதத்தின் பின்னரே தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பமானதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலவாக்கலை தமிழ்த் தேசியக் கல்லூரி, தலவாக்கலை சுமன தேசியக் கல்லூரி, பாரதி தமிழ் மகா வித்தியாலயம், வட்டகொடை தமிழ் மகா வித்தியாலயம், வட்டகொடை சிங்கள மகா வித்தியாலயம், சென்கிளயார் தமிழ் மகா வித்தியாலயம், கிரேட்வெஸ்டன் தமிழ் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த 16-18 வயது பிரிவு மாணவர்களுக்கு இன்று சுமன தேசிய கல்லூரியில் 'பைசர்' தடுப்பூசி ஏற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
பாடசாலையை விட்டு இடைவிலகிய, சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றியவர்கள் உட்பட சுமார் ஆயிரத்து 500 பேருக்குத் தடுப்பூசி ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தடுப்பூசியைப் பெறுவதற்கு மாணவர்கள், பெற்றோர்கள் சகிதம் வந்திருந்தனர். சீருடை மற்றும் வர்ண ஆடைகளில் மாணவர்கள் வந்திருந்தனர்.
இதன்போது சீருடை அணிந்து வந்த மாணவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி வழங்கப்படும் என கொட்டகலை சுகாதாரப் பிரிவுக்குட்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து அங்கு வர்ண ஆடைகளில் வந்த மாணவர்கள், அவர்களின் பெற்றோர் மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் தலவாக்கலை, லிந்துலை நகர சபை தலைவருக்குத் தெரியப்படுத்தப்பட்டது. அவரும், கொட்டகலை பிரதேச சபையின் உறுப்பினர்கள் சிலரும் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சு நடத்தினர். எனினும், தடுப்பூசி ஏற்றப்படவில்லை. இறுதியில் இ.தொ.காவின் மேல் மட்டத்துக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த இராஜாங்க அ
மைச்சர் ஜீவன் தொண்டமான்(Jeevan Thondaman), மத்திய மாகாண சுகாதார பணிப்பாளருடன் தெலைபேசி மூலம் கலந்துரையாடி, அனுமதி பெற்றுக் கொடுத்துள்ளார்.






பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri
