ஜெபித்துக் கொண்டிருந்த மூதாட்டி கொடூரமாக கொலை! - யாழில் சம்பவம்
யாழ்ப்பாணம், இராசாவின் தோட்டப் பகுதியில், தனிமையில் இருந்து ஜெபித்துக் கொண்டிருந்த மூதாட்டியொருவர், இன்று (22) மதியம் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு அடித்து படுகொலை செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த காணிக்கையம்மா ஜெயசீலி பூபதி (வயது 72) என தெரிவிக்கப்படுகிறது.
கதிரையில் இருந்து ஜெபித்துக் கொண்டிருந்த பொழுது குறித்த மூதாட்டி பின் பக்கமாக வந்த மர்ம நபர்களால் அவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
கொள்ளையிட வந்தவர்களே இதனைச் செய்திருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



