இன்றே பதிவுசெய்யுங்கள்..! றீச்ஷாவில் கோலாகலமாக இடம்பெறவுள்ள உணவுத்திருவிழா
இலங்கை பாரம்பரியத்தை பேணும் றீ(ச்)ஷா பண்ணையில் உணவுத் திருவிழா இன்னும் சில மாதங்களில் சிறப்பாக இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“உணவே மருந்து - மருந்தே உணவு” என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டு, அறுசுவை உணவுகளை உண்ணும் பழக்கம் தமிழர்களின் வழக்கமாக பார்க்கப்படுகின்றது.
றீச்ஷாவில் உணவுத்திருவிழா
இதன்படி, இலங்கையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழர்களின் பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கங்கள் உலகிற்கு காட்டும் வகையில் கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபை எல்லைக்குள் றீ(ச்)ஷா ஏற்பாடு செய்த உணவுத் திருவிழா எதிர்வரும் ஆக்ஸ்ட் மாதம் 7,8,9 மற்றும் 10 திகதிகளில் பிரமாண்டமாக இடம்பெறவுள்ளது.
மேலும், மாலை 6 மணியளவில் ஆரம்பமாகி, இரவு 10 மணி வரை இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம், இலங்கை வாழ். மக்களின் கைபக்குவங்களை சுவை பார்ப்பதற்காக பெருந்திரளான மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்தனர். அதேபோன்று இந்த வருடமும் உங்களுடைய வருகையை றீச்ஷா பண்ணை எதிர்பார்த்து நிற்கின்றது.