நாவற்குடா தெற்கு கிராம சேவகர் பிரிவில் 69 பேருக்கு கோவிட் – கிராமசேவகர் பிரிவு முடக்கம்
மட்டக்களப்பு சுகாதார அதிகாரி பிரிவிலுள்ள நாவற்குடா தெற்கு பகுதியில் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையில் 69 பேருக்கு கோவிட் தொற்று உறுதி கண்டறியப்பட்டதையடுத்து அந்த பகுதி கிராம சேவகர் பிரிவு நேற்று(03) முதல் முடக்கித் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிரதேச சுகாதார அதிகாரி பணிப்பாளர் வைத்தியர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதியில் கடந்த 2 ம் திகதி மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனையில் 69 பேருக்குத் தொற்று உறுதி கண்டறியப்பட்டதையடுத்து அவர்களை உடனடியாக கோவிட் சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளுக்குச் சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கிராம சேவகர் பிரிவை நேற்று முதல் முடக்கித் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அந்த பகுதியிலிருந்து எவரும் வெளியே வரமுடியாது உள்ளே நுழையவும் முடியாதவாறு பொலிஸார், இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை: ஹார்முஸ் நீரிணை திறப்புக்கு நம்பிக்கை News Lankasri
நாங்கள் உயிர்வாழ்வதற்கு ஏன் கடவுள் எங்களைத் தேர்ந்தெடுத்தார்? நேபாளத்தில் தப்பிய தம்பதி உருக்கம் News Lankasri