இலங்கையில் மூன்றில் ஒரு பட்டதாரி வேலையில்லாமல் திண்டாட்டம்
இலங்கையில் மூன்றில் ஒரு பட்டதாரி வேலையில்லாமல் இருப்பதாக பல்கலைக்கழகங்களால் நடத்தப்பட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு தொடர்பில் 2023 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி மேற்குறிப்பிட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த வேலைவாய்ப்பு விகிதம்
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, அதன் 2024 செயற்பாட்டு அறிக்கையில்,
கடந்த ஆண்டு ஒட்டுமொத்த பட்டதாரி வேலைவாய்ப்பு விகிதம் 69.1 வீதமாகவும், 30,703 பட்டதாரிகள் வேலைவாய்ப்பு சந்தையில் நுழைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
திறந்த பல்கலைக்கழக பட்டதாரிகளில் 93.8 வீத பேரும், மொரட்டுவ பல்கலைக்கழக பட்டதாரிகளில் 85.5 வீத பேரும் வேலை வாய்ப்பில் உள்ளனர் என கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புள்ளிவிவரங்களில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக பட்டதாரிகளில் 71.4வீதம், வயம்ப பல்கலைக்கழத்தில் 72.3 வீதம் , கிழக்குப் பல்கலைக்கழக பட்டதாரிகள் 67.5 வீதம் மற்றும் கொழும்பு பல்கலையில் 66.8 வீதம் பேர் குறைந்த வேலைவாய்ப்பில் உள்ளனர்.
ருஹுணு, யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்கள் முறையே 58.1வீதம், 53.5 வீதம் மற்றும் 52.8 வீதம் என குறைந்த வேலைவாய்ப்பு விகிதங்களைப் பதிவு செய்துள்ளன.



