விஷவாயு கசிவால் 30 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
புசல்லாவ, டெல்டா பிரதேசத்தில் விஷவாயு கசிவால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக 30 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கம்பளை மற்றும் வஹுகபிட்டிய வைத்தியசாலைகளில் பாதிக்கப்பட்ட மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புசல்லாவ, டெல்டா பெருந்தோட்டப் பகுதியில் அமைந்துள்ள நீர் விநியோகத் திட்டத்தின் கீழ், நீர் சுத்திகரிக்க குலோரின் வாயு பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஷவாயு கசிவு
அந்தக் குலோரின் வாயு கசிவு காரணமாக இப்பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விஷவாயு கசிவு ஏற்பட்டதையடுத்து, சுத்திகரிப்பு தொட்டிக்கு அண்மையில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், அருகில் உள்ள தேயிலைச் செடிகளும் பாதிபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த நீர் விநியோகத் திட்டத்தின் ஊடாக புசல்லாவ, பாரதெக்க ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



