பாடசாலையில் சித்தியடைந்த ஒரே மாணவன் - பெறுபேறுகள் வெளியாகுவதற்கு முன்னரே மரணம்
தற்போது வெளியாகியுள்ள ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளிவருவதற்கு முன்னர் அதில் தோற்றிய மாணவன் உயிரிழந்த துயர சம்பவம் பதிவாகி உள்ளது.
பெறுபேறுகள் வெளியாவதற்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் துரதிஷ்டவசமாக உயிரிழந்த மாணவன் 159 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.
பலாங்கொடை, வதுகாரகந்த பகுதியை சேர்ந்த சுபுன் சதருவன் என்ற இந்த மாணவன் பலாங்கொடை வலேபொட தொரவெலகந்த பாடசாலையில் கல்வி பயின்றுள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சை
வெளியான பெறுபேறுகளுக்கு அமைய அந்தப் பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஒரேயொரு மாணவர் அவராகும்.
இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் குறித்து, தாயார் குசுமா பொடிமணிகே தகவல் வெளியிட்டுள்ளார்.
“என் மகன் இந்த முறை புலமைப்பரிசில் பரீட்சை எழுதி முடிவுகளுக்காக காத்திருந்தார். புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய பின்னர் 160 மதிப்பெண்களை பெற வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.
சித்தியடைந்த மாணவன்
எனினும் தேர்வு முடிவுகள் வருவதற்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்பு, அவர் திடீரென நோய்வாய்ப்பட்டு எங்களை விட்டுப் பிரிந்துவிட்டார்.
முடிவுகளைப் பார்க்கும்போது, அவர் 159 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இந்த வருடம் புலமைப்பரிசில் பரீட்சையில் பாடசாலையில் சித்தியடைந்த ஒரே மாணவன் என் மகன்தான்.
எனினும் இந்த முடிவில் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
