நாடளாவிய ரீதியில் ஆரம்பமான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை - பலப்படுத்தப்படும் பொலிஸ் பாதுகாப்பு

Ministry of Education Sri Lankan Peoples Grade 05 Scholarship examination Sri Lanka Government Education
By Theepan Aug 09, 2026 03:49 AM GMT
Report

நாட்டில் தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை இன்று(09.08.2026) இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

நாடு முழுவதும் உள்ள பரீட்சை நிலையங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்த பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

மாணவர்கள் தங்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் வாழ்த்துகளுடன் பரீட்சைக்கு தயாராகி பரீட்சை நிலையங்களுக்கு சென்றுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் ஆரம்பமான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை - பலப்படுத்தப்படும் பொலிஸ் பாதுகாப்பு | Grade 5 Scholarship Examination

மாணவர்களின் எதிர்கால கல்வி வாய்ப்புகளில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பரீட்சை சுமுகமாகவும் அமைதியான முறையிலும் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவர்களும் சிறப்பாகச் செயற்பட்டு நல்ல பெறுபேறுகளைப் பெற வேண்டும் என பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் கல்விச் சமூகத்தினர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். 

கைது செய்யப்படுவாரா ஹிஸ்புல்லாஹ் : பிள்ளையானுக்கு நடக்கப் போவது என்ன..

கைது செய்யப்படுவாரா ஹிஸ்புல்லாஹ் : பிள்ளையானுக்கு நடக்கப் போவது என்ன..

சிறை மோதல்களின் பின்னணியில் நிச்சயம் நான்தான்..! ஜனாதிபதியின் செய்தியை முன்கூட்டியே அறிவித்த நாமல்

சிறை மோதல்களின் பின்னணியில் நிச்சயம் நான்தான்..! ஜனாதிபதியின் செய்தியை முன்கூட்டியே அறிவித்த நாமல்

நுவரெலியா 

நுவரெலியா மாவட்டத்தில் கொட்டித் தீர்க்கும் மழையையும் பொருட்படுத்தாது, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் ஆர்வத்துடன் பரீட்சை நிலையங்களுக்கு வருகை தந்துள்ளனர்.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று(09.08.2026) நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிகாலை முதல் மழை பெய்து வந்த போதிலும், மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் பரீட்சை நிலையங்களுக்கு வருகை தந்துள்ளனர்.

மாணவர்களுக்காக விசேட பேருந்து சேவை

மழை காரணமாக மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களை கருத்திற்கொண்டு, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை முச்சக்கரவண்டிகள் மற்றும் வாடகை வாகனங்களில் அழைத்துச் சென்று பரீட்சை நிலையங்களில் சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் போக்குவரத்து வசதிக்காக அரசாங்கத்தினால் விசேட பேருந்து சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

நாடளாவிய ரீதியில் ஆரம்பமான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை - பலப்படுத்தப்படும் பொலிஸ் பாதுகாப்பு | Grade 5 Scholarship Examination

இதன் காரணமாக மாணவர்கள் பரீட்சை ஆரம்பிக்கும் நேரத்திற்கு முன்னதாகவே பரீட்சை நிலையங்களுக்கு வருகை தந்திருந்தனர். அத்துடன், பரீட்சை நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது.

சீரற்ற காலநிலையை பொருட்படுத்தாது, நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் நம்பிக்கையுடனும் ஆர்வத்துடனும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாடளாவிய ரீதியில் ஆரம்பமான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை - பலப்படுத்தப்படும் பொலிஸ் பாதுகாப்பு | Grade 5 Scholarship Examination  

நாடளாவிய ரீதியில் ஆரம்பமான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை - பலப்படுத்தப்படும் பொலிஸ் பாதுகாப்பு | Grade 5 Scholarship Examination

மேலதிக தகவல் - மலைவாஞ்சன்

கந்தளாய் 

நாடளாவிய ரீதியில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இன்று(09.08.2026) ஆரம்பமாகியுள்ள நிலையில், கந்தளாய் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளிலும் பரீட்சை நடவடிக்கைகள் சுமுகமாகத் தொடங்கியுள்ளன.

இந்த முறை கந்தளாய் கல்வி வலயத்திற்குட்பட்ட மொத்தம் 37 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.

இதற்கமைய, சிங்கள மொழிமூலப் பாடசாலைகள்- 29 மற்றும் தமிழ் மொழிமூலப் பாடசாலைகள் - 08 ஆகியவற்றில் இந்த பரீட்சை இடம்பெறுகின்றன.

நாடளாவிய ரீதியில் ஆரம்பமான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை - பலப்படுத்தப்படும் பொலிஸ் பாதுகாப்பு | Grade 5 Scholarship Examination

கந்தளாய் அக்ரபோதி தேசிய பாடசாலை உள்ளிட்ட முக்கிய பரீட்சை மையங்களில் பரீட்சைக்கான அனைத்துக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் வலயக் கல்வி அலுவலகத்தின் வழிகாட்டலின் கீழ் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாணவர்கள் அமைதியான சூழலில் பரீட்சை எழுதுவதற்கான அனைத்து வசதிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியில் ஆரம்பமான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை - பலப்படுத்தப்படும் பொலிஸ் பாதுகாப்பு | Grade 5 Scholarship Examination

மேலதிக தகவல் -யூசுப்

 இலங்கை முழுவதும் தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09) காலை நாடு தழுவிய ரீதியில் அமைதியாகவும், சுமுகமான முறையிலும் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

அமைக்கப்பட்ட 2,723 பரீட்சை நிலையங்களில் மாணவர்கள் மிகவும் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் பரீட்சைக்குத் தோற்றி வருகின்றனர்.

வினாத்தாள்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் எவ்வித பதற்றமுமின்றி நம்பிக்கையுடன் பரீட்சை எழுதுவதை அவதானிக்க முடிந்தது. பரீட்சை நடவடிக்கைகளை எவ்வித இடையூறுகளுமின்றி மிகவும் நேர்த்தியாக நடத்துவதற்காக, நாட்டின் அனைத்துப் பரீட்சை நிலையங்களுக்கும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளில் பலப்படுத்துப்படும் பொலிஸ் பாதுகாப்பு

பரீட்சார்த்திகளின் போக்குவரத்துச் சௌகரியங்கள் மற்றும் நிலையங்களின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் வகையில் பொலிஸார் தீவிரக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் ஆரம்பமான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை - பலப்படுத்தப்படும் பொலிஸ் பாதுகாப்பு | Grade 5 Scholarship Examination

இதற்கமைய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை அம்பாறை மாவட்டத்தில் கடும் வெயிலுக்கு மத்தியில் இடம்பெற்று வருகின்றது.பரீட்சை காலை 09.30 மணிக்கு ஆரம்பமானதுடன் பரீட்சார்த்திகள் அனைவரும் உரிய ஒழுங்கமைப்புடன் பரீட்சை மண்டபத்திற்கு சென்றதை காண முடிந்தது.

இன்று காலை ஆரம்பமான குறித்த பரீட்சைக்கு கல்முனை கல்வி வலயம் சம்மாந்துறை கல்வி வலயத்தை சேர்ந்த மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சைக்கு சமூகமளித்திருந்தனர்.

மேலும் பரீட்சை இடம்பெற்ற நிலையங்களில் பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, பரீட்சையை எவ்வித பிரச்சினைகளும் இன்றி பாதுகாப்பாக இடம்பெறுதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.   

நாடளாவிய ரீதியில் ஆரம்பமான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை - பலப்படுத்தப்படும் பொலிஸ் பாதுகாப்பு | Grade 5 Scholarship Examination

மேலதிக தகவல் - சிஹான் பாரூக்

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களிலும் பெற்றோரின் பெரும் எதிர்பார்ப்புடன் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு கல்வி வலயம்,மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம்,பட்டிருப்பு கல்வி வலயம்,கல்குடா கல்வி வலயம் ஆகியவற்றில் உள்ள பாடசாலைகளில் இன்றைய தினம்(09) ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெற்றது.

நாடளாவிய ரீதியில் ஆரம்பமான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை - பலப்படுத்தப்படும் பொலிஸ் பாதுகாப்பு | Grade 5 Scholarship Examination

இன்றைய தினம் மாணவர்கள் ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளை முன்னெடுத்து பரீட்சை நிலையங்களுக்கு சென்றதை காணமுடிந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றைய தினம் சுமுகமான முறையில் பரீட்சைகள் நடைபெற்றுள்ளதுடன், பரீட்சை நிலையங்களுக்கு முன்பாக பெற்றோர் பெரும் எதிர்பார்ப்புடன் நின்றுகொண்டிருப்பதை காணமுடிந்தது.

நாடளாவிய ரீதியில் ஆரம்பமான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை - பலப்படுத்தப்படும் பொலிஸ் பாதுகாப்பு | Grade 5 Scholarship Examination

மேலதிக தகவல் - குமார்

முள்ளிப்பொத்தானை

 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09.08.2026) நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்ற நிலையில் புள்ளிப் பொத்தானை கோட்டத்தில் உள்ள மாணவர்களும் பரீட்சைக்கு ஆர்வத்துடன் வருகை தந்தனர்.

முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரியில் உள்ள பரீட்சை மண்டபத்துக்கு இம் மாணவர்களின் வருகையை அவதானிக்க கூடியதாக இருந்தது.

பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் தங்களது பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுடன் பரீட்சை நிலையங்களுக்கு வருகை தந்தனர். காலை முதலே மாணவர்கள் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் பரீட்சை நிலையங்களுக்கு வருகை தந்ததுடன், பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து பரீட்சை நிலையங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

மாணவர்களின் எதிர்கால கல்வி வாய்ப்புகளுக்கு முக்கியமானதாகக் கருதப்படும் இப்புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்புடன் மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றினர்.

பரீட்சை நிலையங்களில் மாணவர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததுடன், பரீட்சை சுமுகமாக நடைபெற்று வருகின்றது.

செய்தி-றொசான்

கிண்ணியா

கிண்ணியா கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09) சுமுகமாகவும் பாதுகாப்பாகவும் நடைபெற்றது.

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற இப்பரீட்சைக்கு கிண்ணியா கல்வி வலயத்திற்குட்பட்ட மூன்று கோட்டங்களிலும் மாணவர்கள் ஆர்வத்துடன் தோற்றினர்.

பரீட்சை நிலையங்களுக்கு அதிகாலை முதலே மாணவர்கள் தங்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் வருகை தந்தனர்.

நாடளாவிய ரீதியில் ஆரம்பமான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை - பலப்படுத்தப்படும் பொலிஸ் பாதுகாப்பு | Grade 5 Scholarship Examination

தங்களது பிள்ளைகளின் எதிர்கால கல்விப் பயணத்தில் முக்கியமான பரீட்சையாகக் கருதப்படும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு பெற்றோர்கள் மிகுந்த அக்கறையுடன் மாணவர்களை அழைத்து வந்ததை காணக்கூடியதாக இருந்தது.

கிண்ணியா கல்வி வலயத்தில் மூன்று கோட்டங்களைச் சேர்ந்த பரீட்சை நிலையங்களில் இணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு, பரீட்சை நடவடிக்கைகள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் முன்னெடுக்கப்பட்டன.

GalleryGalleryGalleryGalleryGallery
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US