பரீட்சை வினாத்தாள் கசிவு! எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
வட மத்திய மாகாணத்தில் 11ஆம் தர தவணைப் பரீட்சை தொடர்பான சிங்கள இலக்கிய வினாத்தாள், சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்று (06) நடைபெறவிருந்த இறுதிப் பரீட்சை பிற்போடப்பட்டதாக வடமத்திய மாகாண கல்வி மற்றும் முதலமைச்சர் அமைச்சின் செயலாளர் சிறிமேவன் தர்மசேன தெரிவித்துள்ளார்.
வினாத்தாள் கசிவு
இதன்படி, இன்று காலை 8.00 மணியளவில் 08 வலயங்களில் உள்ள 30 பிரிவுகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் உரிய வினாத்தாள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பரீட்சை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு மற்றுமொரு வினாத்தாள் வழங்கப்படும் என சிறிமேவன் தர்மசேன மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் தலைமையக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த முறைகேடு எவ்வாறு இடம்பெற்றது என்பதை கண்டறிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |