பாலூட்டும் தாய்மார்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்க அனுமதி
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு கோவிட் தடுப்பூசி பெறுவது பொருத்தமானது என்று தலைமை தொற்று நோயியல் நிபுணர் கலாநிதி சுதத் சமரவீர இன்று தெரிவித்தார்.
தடுப்பூசி போடுவது தாய்ப்பால் மாற்றம் அடைவதற்கு ஒரு காரணமாக இருக்காது என்று அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இருப்பினும், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி கொடுக்கலாமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தற்போது சுகாதார அமைச்சகம் நிலைமையை கண்காணித்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கோவிட் தடுப்பூசிகளை வழங்க முடியுமா என்பதைத் தீர்மானிக்க உலகளவில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்கிடையில், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்குவதற்காக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவக் கல்லூரித் தலைவர் கலாநிதி பிரதீப் டி சில்வா அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது கர்ப்பிணித் தாய்மார்களிடையே தொற்று மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையைக்
குறைக்க உதவும் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.





அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

கூலி பட நடிகர் உபேந்திரா மற்றும் மனைவிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! கலக்கத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் Cineulagam

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
